திருப்பெருந்துறையில் நடைபெற்ற சிறுவர் கூத்துக்கான சட்டம் கொடுத்தல் நிகழ்ச்சி

மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரால் நடத்தப்பட்டு வரும் சிறுவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகளின் ஓர் அம்சமாக சிறுவர் கூத்திற்கான சட்டம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று (24.09.2014) மாலை அண்ணாவியார் சி.அலைக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலையாக்கக் களப் பயிற்சியில் பங்குபற்றும் சிறுவர்களும் அவர்களது பெற்றார்களும், ஊர்ப் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நுண்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர்,திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலய அதிபர் திரு.எஸ்.தர்மசீலன், ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் திரு.என்.இன்பராஜா, அறநெறி ஆசிரியை திருமதி.திருமலர்ச்செல்வி மரியதாஸ், நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு.சு.சந்திரகுமார், கூத்துக் கலைஞர் திரு.எஸ்.முத்துலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *